‘கோச்சடையான்’ திரைப்படத்தின் ஓடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.
குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 ம் திகதி வெளியாகவிருந்த ஓடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கோச்சடையான் படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம், பிப்ரவரி 15ம் திகதி இசை வெளியிடப்படும் என்று தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது.
தற்போது பிப்ரவரியில் இசை வெளியீடு முடிந்து, படத்தை ஏப்ரலில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
நாட்டில் முதன்முறையாக 3டி அனிமேசன் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை கே. எஸ். ரவிக்குமார் ஏற்றுள்ளார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
No comments:
Post a Comment