Sunday, January 12, 2014

நீண்ட நாட்கள் பேசாமல் இருந்த மோகன் லாலை பேச வைத்த ஜில்லா பட வெற்றி?

mohan



ஜில்லா படத்தின் வெற்றியை கண்கூடாக உணர்ந்த பிறகு, பல ஆண்டுகள் பேசாமலிருந்த தனது தயாரிப்பாளருக்கு போன்போட்டு பேசியுள்ளார் நடிகர் மோகன்லால்.
அரண் என்ற பெயரில் ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் ஹீரோ மோகன்லால். கார்கில் போர் பின்னணியில் வந்த இந்தப் படம் மலையாளத்தில் கீர்த்தி சக்கரா என்ற பெயரில் வெளியானது.
டப்பிங்கின் போது தமிழில் மோகன்லாலுக்கு குரல் கொடுத்தவர் ராஜீவ்.
ஆனால் உண்மையில் இந்தப் படத்துக்கு தமிழிலும் மோகன்லாலே பேச வேண்டும் என்று விரும்பினாராம் படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி. ஆனால் மோகன்லால் பேச மறுத்துவிட, அவருக்கு தமிழில் குரல் கொடுத்தவர் நடிகர் ராஜீவ்.
இதனால் மோகன்லாலுக்கும் ஆர்பி சவுத்திரிக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விட்டதாம்.


ஜில்லா கதையை உருவாக்கும்போதே மோகன்லாலை மனதில் வைத்து உருவாக்கியதாக இயக்குநர் ஆர்டி நேசன் சொல்ல, அதற்கு விஜய்யும் சம்மதித்துவிட்டதால் அமைதியாக இருந்துவிட்டாராம் ஆர்பி சவுத்ரி.
ஜில்லா படம் உருவாகும்போதுகூட, மோகன்லாலுடன் நேரடியாக எதுவுமே பேசியதில்லையாம் சவுத்ரி. எல்லாம் இயக்குநர் மூலம்தானாம்.
இப்போது படம் வெளியாகி, உலகெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்ததும், மோகன்லாலே ஆர்பி சவுத்ரிக்கு போன் செய்தாராம். பழையதை மறந்துவிடுவோம் என்று கூறியதோடு, ஜில்லா மாதிரி வெற்றிப் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததற்கும், அந்தப் படத்தை கேரளாவில் விநியோகம் செய்ய உரிமை தந்ததற்கும் நன்றி தெரிவித்தாராம்.
இதனை தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியே இன்று நிருபர்களிடம் கூறினார்.
“மோகன்லால் ஜில்லா படத்தின் ஹீரோக்களில் ஒருவர் மட்டுமல்ல, கேரள விநியோகஸ்தரும்கூட. அதனால் அவருக்கு இந்த வெற்றியின் பிரமாண்டம் புரிந்திருக்கிறது. அதை என்னுடன் பேசும் போதும் கூறினார். ஜில்லா வெற்றி எங்கள் இருவரையும் சேர்த்துவிட்டது,” என்றார் ஆர்பி சவுத்ரி.

No comments:

Post a Comment