Saturday, January 11, 2014

‘வீரம்’ படத்துக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு : இன்றுமுதல் 30 தியேட்டர்கள் எக்ஸ்ட்ரா!

ஜீத்தின் ‘வீரம்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து இன்றுமுதல் 30 தியேட்டர்கள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அஜீத் என்றாலே அதே கோட்டும் ஷூட்டும் தாம் கெட்டப்பா என்று சலித்துப் போன தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுமையான ரசிப்பு அனுபவத்தை ‘வீரம்’ படத்தில் கொடுத்திருக்கிறார் டைரக்டர் சிவா.
Veeram-Movie-Stills-20


இதில் வழக்கமான அஜீத் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் அதாவது வேஷ்டி சட்டையுடன் புதுமையான கெட்டப்பில் வருகிறார் அஜீத். அதனாலே என்னவோ இந்தப்படத்தில் அஜீத்தின் கெட்டப் சூப்பராகவே ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் டைரக்டர் சிவாவும் படத்தை ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட் என்று முன் சீட்டில் உட்கார்ந்து விசிலடிக்கும் ரசிகர்களை மட்டுமில்லாமல் பர்ஸ்ட் க்ளாசில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகர்களையும் மனிதில் கொண்டு படத்தை விறுவிறுப்பான எண்டெர்டெயின்மெண்ட் படமாக டைரக்ட் செய்திருக்கிறார்.
படத்தை பார்த்து விட்டு வெளிவரும் எல்லா ரசிகர்களுமே ‘வீரம்’ படம் ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் படமாக இருப்பதாக சொல்வதால் அஜீத் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தியேட்டர் உரிமையாளர்களும் கூட ‘வீரம்’ படத்துக்கு இருக்கும் ஏகோபித்த வரவேற்பைப் பார்த்து சந்தோஷத்தில் உள்ளனர்.
இதையடுத்து இன்றுமுதல் தமிழ்நாட்டில் ‘வீரம்’ படத்துக்கு கூடுதலாக 30 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது என்று அதை வாங்கிய வினியோகஸ்தர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் சுமார் 425 தியேட்டர்களுக்கும் மேல் ரிலீசாகியுள்ள ‘வீரம்’ படம் இன்றுமுதல் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 500 தியேட்டர்களை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment